மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூல் சாதனை படைத்த கன்னடப் படம் 'காந்தாரா'. இப்படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை படைத்து 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
அதன்பிறகு ஓடிடி தளத்திலும் வெளிவந்து எண்ணற்ற ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்தனர். இப்போது உலக அளவிலான ரசிகர்களை ஈர்ப்பதற்காக படத்தை ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து ஓடிடியில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து 'காந்தாரா' படத்தையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தகவலைப் பகிர்ந்து, “தெய்வீகத்தால் மயங்கவும்,” என ரிஷாப் ஷெட்டி தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் 'காந்தாரா' வெளியாவதால் இந்த தெய்வீக மணம் உலகம் முழுவதிலும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.