அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் சென்றனர். அங்கு 15 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பனி சூழ்ந்த காஷ்மீர்தான் கதை களம் என்பதால் குளிர்காலத்தில் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு எதிர்பார்த்ததை விட அதிக குளிர் சூழ்நிலை இருக்கிறது. அதோடு கடும் பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால் படப்பிடிப்பில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது சென்னை திரும்பி உள்ளார். என்றாலும் காஷ்மீரில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாகிறது. அதில் த்ரிஷாவின் பங்கு குறைவு, அவர் அதை முடித்து விட்டே திரும்பி உள்ளார் என்று த்ரிஷா தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.