சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ‛‛ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தது தருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன். இந்தாண்டு எனது 7 படங்கள் ரிலீஸாக உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் இந்தாண்டு எனக்கு லக்கியான ஆண்டு. தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய காலத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது'' என்றார்.