மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் காலமானார். அவரது உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய ஸ்டன்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, சத்யராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும், ஸ்டன்ட் மாஸ்டர்கள், கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினார்.
பூரண வாழ்க்கை வாழ்ந்தவர் - ரஜினி புகழாரம்
ஜூடோ ரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛1976ல் இருந்து அவருடன் எனக்கு பழக்கம் உள்ளது. சண்டைக்காட்சியில் தனக்கு என்று ஒரு தனி ஸ்டைலை திரையுலகிற்கு கொண்டு வந்தவர் ஜூடோ ரத்தினம். அதேப்போன்று சூப்பர் சுப்பராயன், தர்மா போன்ற ஏராளமான ஸ்டன்ட் மாஸ்டர்களையும் உருவாக்கியவர். நடிகர்ளுக்கு பாதுகாப்பு போன்று ஸ்டன்ட் கலைஞர்களையும் பாதுகாப்பாக பார்த்து கொள்வார். மிகவும் மென்மையானவர். முரட்டுக்காளை ரயில் சண்டையை இப்போது வரை யாராலும் மறக்க முடியாது. அந்த மாதிரி ஒரு மனிதரை ஸ்டன்ட் யூனியனில் பார்ப்பது அபூர்வம். ஒரு சரித்திரம் படைத்து மிகப்பெரிய சாதனை படைத்தவர். 93 வயது வரை பூரண வாழ்க்கை வாழ்த்து அமரராகி உள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
மென்மையான மனிதர் - சத்யராஜ்
சினிமா ஸ்டன்ட் கலைஞர்கள் என்றால் முரட்டுத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர் மிகவும் மென்மையானவர். நடிகர்களிடமும், ஸ்டன்ட் கலைஞர்களிடமும் கடிந்து பேசி நான் பார்த்தது இல்லை. உலகம் பிறந்தது எனக்காக என்ற படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித்திருப்பேன். அதில் ஒரு சண்டைக்காட்சியில் இரண்டு சத்யராஜ் மோதுவது போன்று இருக்கு. அந்தகாலக்கட்டத்தில் அந்த சண்டையை அற்புதமாக அமைத்து இருப்பார் ஜூடோ ரத்தினம் மாஸ்டர். கலையுலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் இரங்கல்
பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கமல் இரங்கல்
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் : ‛‛கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி'' என தெரிவித்துள்ளார்.