ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பார்சா பிக்சர்ஸ் மீனாக்ஷி சுந்தரம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் கிரிமினல். கவுதம் கார்த்திக், சரத்குமார் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்ன குமார் இசை அமைக்கிறார். தக்ஷினா மூர்த்தி ராம்குமார் இயக்குகிறார். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.
இதன் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து தயாரிப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் கிரிமினலாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும், புதிதாகவும் பார்வையாளர்களுக்கு தெரிவார் என்றார்.