ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பொங்கலை முன்னிட்டு 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்ததால் இந்த வாரம் எந்த புதிய படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று சத்தமில்லாமல் ஒரு படம் வெளியாகிறது. பாபி சிம்ஹா, ஷிவதா, பூஜா தேவரியா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்க விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள 'வல்லவனுக்கும் வல்லவன்' தான் அந்தப் படம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அப்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக 'மெர்சல்' படத்தைத் தயாரித்த ராமசாமி, பாபி சிம்ஹா, சதீஷ் சுந்தராஜ ஆகியோர் இருந்திருக்கிறார்கள். இன்று வெளியான வெளியீட்டு போஸ்டரில் பாபி சிம்ஹாவின் மனைவியான ரேஷ்மி சிம்ஹா, ராமசாமி ஆகியோரது பெயர்கள் மட்டுமே தயாரிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளது.
2016ம் வருடத்தில் பாபி சிம்ஹா தமிழில் பிஸியான கதாநாயகனாகவும் இருந்தார். அப்போது இந்தப் படம் வெளிவந்திருக்க வேண்டியது. ஆறு வருடம் தாமதமாக வருகிறது. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படமான சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.
தமிழில் 2019க்குப் பிறகு பாபி சிம்ஹா நடித்து வெளிவரும் படம் 'வல்லவனுக்கும் வல்லவன்'.