சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
யசோதா படத்தை அடுத்து சாகுந்தலம், குஷி என்ற இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில், குணசேகர் இயக்கி உள்ள சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிசர்மா இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிகா மல்லிகா என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மனதை மயக்கும் குரலில் ரம்யா பஹ்ரா பாடியுள்ள மெலோடி பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.