நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம், பா.ரஞ்சித், எச்.வினோத் உட்பட பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டுள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 7 மாநிலங்களைச் சார்ந்த பிரபல ஹீரோக்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பிரபல ஹீரோக்களில் ஏற்கனவே கமலுடன் ஹேராம் படத்தில் நடித்த ஷாருக்கானும் ஒருவர். அதோடு இந்த 7 மாநில ஹீரோக்களும் கெஸ்ட் ரோல்களில் நடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் கமலின் 234வது படம் ஒரு மெகா பான் இந்தியா படமாக உருவாக்கப் போகிறது. தற்போது இப்படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம்.