ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் திரையுலகில் 1988ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து 'என் ராசாவின் மனசிலே', 'சின்ன கவுண்டர்', 'அரண்மனை கிளி' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமை மூலமாக தனிப்பட்ட இடத்தை பிடித்தார்.
காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் திரையுலகில் இருந்து நடிகர் வடிவேலு விலகியிருந்தார். சமீபத்தில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் நடிகர் வடிவேலு ரீஎன்டரி கொடுத்தார்.
சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வந்தார். உடல் நலம் குன்றியிருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (83 வயது) ஐராவதநல்லூரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் காலமானார். நடிகர் வடிவேல் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.