ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு "சைத்ரா" எனப் பெயரிட்டுள்ளனர். யாஷிகாவுடன் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெனித்குமார் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெனித்குமார் கூறுகையில், ‛24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது' என்றார்.