ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பி வாசு இயக்கத்தில் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் நடித்தவர் ரஜினி. அதன்பிறகு சந்திரமுகி 2 படத்தில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாக கதைகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாத ரஜினி, அந்த படத்தில் நடிக்க மறுத்து விடவே தற்போது சந்திரமுகி 2 படத்தை ராகவா லாரன்ஸை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார் பி.வாசு. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கிறார்.
சமீபகாலமாக பாகுபலி, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல சரித்திர கதைகளில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால், ரஜினிக்கும் சரித்திர படத்தில் நடிக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. அதன் காரணமாக தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்திற்கு பிறகு ஒரு சரித்திர கதையில் நடிக்க ரஜினி முடிவு எடுத்துள்ளார்.
ரஜினி நடிக்கும் அந்த படத்தை பி. வாசு இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படமும் கிட்டத்தட்ட சந்திரமுகி பாணியில் ஹாரர் கலந்த சரித்திர கதையில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ரஜினியின் 171 வது படத்தை பி.வாசு இயக்குவார் என்று தெரிகிறது.