ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 'ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க், ஈ.டி, இண்டியானா ஜோன்ஸ், ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், த லாஸ்ட் வேர்ல்டு - ஜுராசிக் பார்க்' என பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் வைத்துள்ளார்.
அவரை தெலுங்கு திரைப்பட இயக்குனரான ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அது பற்றிய புகைப்படங்களை 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஸ்பீல்பெர்க்கைப் பார்த்து ஆச்சரியத்துடன் கன்னடத்தில் கை வைத்துள்ளார் இயக்குனர் ராஜமவுலி. மேலும் “நான் இப்போது கடவுளைப் பார்த்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் கீரவாணி, “திரைப்படங்களின் கடவுளை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவருடைய காதுகளில் அவருடைய படங்கள் பிடிக்கும், அவற்றில் 'டூயல்' மிகவும் பிடிக்கும் என சொன்னேன். அவருக்கு 'நாட்டு..நாட்டு…' பாடல் பிடிக்கும் என்று சொன்ன போது என்னால் அதை நம்ப முடியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.