ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிஜன்டுகலுடே நாட்டில் ஓரிடவேளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து மாயநதி, வரதன், பிரதர்ஸ் டே உள்ளிட்ட சில மலையாளப்படங்களில் நடித்தார். விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஜகமே தந்திரம், புத்தம்புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்களில் நடித்தார். இவற்றில் பொன்னியின் செல்வனும், கட்டா குஸ்தியும் அவருக்கு புகழை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்ய லட்சுமி, தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் காதல் லோகோவான ஹாட்டினையும் வெளியிட்டிருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது, ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் இணைந்து எங்கேயும் தோன்றியதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி காதலாகியிருக்க முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது. இது ஒருவேளை ஏதாவது ஒரு படத்தின் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையே ஐஸ்வர்யா இன்னொரு பதிவை வெளியிட்டார் அதில் “நண்பர்களே எனது பதிவு இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திந்த போது ஒரு படத்தை எடுத்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். வதந்திகளில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை. நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் "அவர் உங்களுடையவர்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.