விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதை அமைத்தார். அதன் பிறகு தனுசை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களை இயக்கினார். இவற்றில் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும், தனுசும் இணைந்த நானே வருவேன் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
இந்த நிலையில் வாத்தி படத்தை முடித்துவிட்டு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். அதன்பின் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம். இப்படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன். இந்த படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.