4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. தமிழில் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு வெளியீடு சில நாட்கள் தள்ளி ஜனவரி 14ல் படத்தை வெளியிடுகிறார்கள்.
தெலுங்கு பதிப்பிற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். தமிழ் பதிப்பிற்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை இசையமைப்பாளர் தமன் நேற்று விடியற்காலையில் தான் முடித்தார். படத்தின் டால்பி அட்மாஸ் மிக்சிங் வேலைகளும் இன்று விடியற்காலையில்தான் நிறைவடைந்துள்ளது. தற்போதுதான் படத்தின் 'கன்டென்ட்' அனுப்பும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
தெலுங்கு 'வாரிசு' பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் இன்று(ஜன.,9) காலை நடந்தது . அப்போது ஜன., 14ல் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்தார்.




