ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று டிரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது டுவிட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.
அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி டுவிட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.