என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்த சூர்யா, ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் ஆகி வரும் சூரரைப்போற்று படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த சரித்திரம் படம் 10 மொழிகளில் தயாராகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா, அதை முடித்ததும் மீண்டும் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இந்த படத்தை 2023 ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் சூர்யா. அதன்பிறகே அவர் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.