பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பட அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என மூன்று பாடல்களை சில நாட்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தபாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் படத்தில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக வீரா, முத்தழகனாக ஜிஎம் சுந்தர், ராமச்சந்திரனாக அஜய், தயாளனாக சமுத்திரகனி, கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். ஆகியோரின் கேரக்டர்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
7 மணிக்கு டிரைலர்
துணிவு படத்தின் டிரைலர் டிச., 31ல் வெளியாகும் என சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். அதன்படி இன்று நடிகர்களின் கேரக்டர்கள் அறிவிப்புடன் நாளை(டிச., 31) மாலை 7 மணிக்கு டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.