கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, 2002ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்த ரோஜா, அதன் பிறகு 2009ல் அந்த கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதையடுத்து இரண்டு முறை ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர், தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரோஜா அளித்த ஒரு பேட்டியில், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தார் பற்றியும் சோசியல் மீடியாவில் வெளியாகும் ஆபாச புகைப்படங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சினிமா மற்றும் அரசியலில் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறேன். சமீப காலமாக சோசியல் மீடியாவில் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தார் பற்றியும் அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. என்னுடைய பிறந்த நாளில் எனது சகோதரர் எனக்கு முத்தமிட்டதை கூட ஆபாசமாக சித்தரித்தார்கள்.
என் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், எனது புகைப்படங்களை ஆபாசமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அதை பார்த்து எனது மகள் மிகுந்த வேதனைப்படுகிறாள். எங்களுக்கும் மனசு இருக்கிறது, குடும்பம் இருக்கிறது என்பதை இதுபோன்ற மோசமான செயல்பாடுகளில் ஈடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வேதனைப்படும் எனது பிள்ளைகளுக்கு, பிரபலங்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். அதனால் இதை எல்லாம் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ரோஜா.