ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பாரதிய ஜனதா கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். 3 முறை பாரத பிரதமராக இருந்து எதிர்கட்சியினராலும் போற்றப்பட்ட தலைவராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கை தற்போது 'மெயின் அடல் ஹூன்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கும் இப்படத்தின் கதையை உத்கர்ஷ் நைதானி எழுதியுள்ளார். இரட்டையர்களான சலீம்-சுலைமான் இசையமைக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வாஜ்பாயகாக பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியாக நடிக்கிறார். தற்போது படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வாஜ்பாயாக நடிப்பது குறித்து பங்கஜ் திரிபாதி கூறும்போது "வாஜ்பாய் ஒரு அரசியல் தலைவர், பிரதமர் மட்டுமல்ல நல்ல சிந்தனைவாதி, கவிஞர், மனிதாபிமானி, தூய மனிதர். அவரது வாழ்க்கை கதையில் அவராக நடிப்பது ஒரு நடிகனுக்கு கிடைக்கும் வாழ்நாள் பாக்கியம்" என்கிறார்.