ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி உள்ள ‛தி கிரேட் இண்டியன் கிச்சன்' படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது. இதற்கிடையில் காசேதான் கடவுளடா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் காந்தாரி, பெரிய வெற்றி பெற்ற கன்னட படமான காந்தாராவின் பாதிப்பில் இந்த படத்திற்கு காந்தாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக உருவாகி வருகிறது. ஹன்சிகா இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், 'ஆடுகளம்' நரேன், பிரிஜிதா, பவன், உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை தொல்காப்பியன் எழுதி உள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதி உள்ளார், வசனம் பாடல்களை ஸ்ரீசெல்வராஜ் எழுதியுள்ளார். முத்து கணேஷ் இசை அமைக்கிறார், பாலசுப்லீரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஹன்சிகா பிளாஷ்பேக்கில் அப்பாவி கிராமத்து பெண்ணாகவும், நிகழ்காலத்தில் நவநாகரீக பெண்ணாகவும் இரண்டு வேடத்தில் நடிப்பதாவும், ஒரு ஹன்சிகாவுக்கு மெட்ரோ சிரிஷ் ஜோடி எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.