ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரத்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் ஏற்கனவே ‛‛ரஞ்சிதமே...., தீ...' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதிலும் விஜய் பாடிய ‛ரஞ்சிதமே' பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவதாக அம்மா பாடலான ‛சோல் ஆப் வாரிசு' என்ற தாய் பாசத்தை உருக வைக்கும் பாடலை வெளியிட்டுள்ளனர். சின்னக்குயில் சித்ரா இந்த பாடலை பாடி உள்ளார். அம்மாவின் பாசத்துடன் உருக வைக்கும் இந்தபாடல் 2 மணிநேரத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து டிரெண்ட் ஆனது.