ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் |
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் முப்தி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ‛பத்து தல' படத்திலல் சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சிம்புவின் பிறந்தநாள் தினத்தில் வெளியானது. மேலும் இப்படம் டிசம்பர் 14ம் தேதி வெளியாக இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிகட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வரும் என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்தில் தனுஷின் வாத்தி உட்பட சில படங்கள் வெளியாவதால் பத்து தல படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.