போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் |
தனது மகன் விஜித் பச்சான் நடிப்பில் ‛டக்குமுக்கு திக்கு தாளம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் தங்கர்பச்சான், தற்போது ‛கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தை இயக்கி வருகிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்திருக்கிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் வரிசையில் இந்த படமும் ஒரு அழுத்தமான கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.