ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். வித்தியசாமான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த 'நானே வருவேன்' படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை, விமர்சனங்களையும் பெறவில்லை. 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக அந்தப் படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.
இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஆண்டில் 'பீஸ்ட்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்து 'சாணி காயிதம்' படத்திலும், 'நானே வருவேன்' படத்திலும் நடித்தார். தற்போது 'பகாசுரன்' படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் 'கருத்தான' பதிவுகளைப் போடுபவர் செல்வராகவன். அந்த விதத்தில் நேற்று 'தடுக்கி விழுவது' பற்றிய ஒரு அட்வைஸ் பதிவு போட்டுள்ளார். அதில், “இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்து கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த அட்வைஸை அவர் இயக்குனர் செல்வராகவனுக்காக சொல்லிக் கொண்டாரா அல்லது பொதுவாக சொல்லிக் கொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.