அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தெலுங்குத் திரையுலகத்தில் அவ்வப்போது சில புதிய நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து இப்போது ஸ்ரீலீலா என்ற புதிய நடிகை ஏற்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவில் பிறந்த இந்தியர் ஸ்ரீலீலா. அதன் பிறகு பெங்களூருவில் வளர்ந்தவர். இந்த வருடம்தான் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து டாக்டர் ஆகியுள்ளார். தற்போதுள்ள நடிகைகளில் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோர் டாக்டருக்குப் படித்து முடித்தவர்கள். ஷிவானி ராஜசேகர் டாக்டருக்குப் படித்து வருகிறார்.
கன்னடத்தில் 2019ம் ஆண்டு 'கிஸ்' என்ற படத்தில் அறிமுகமாகி பின் 'பாராதே, பை டூ லவ்,' ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'பெல்லி சன்டடி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ரவி தேஜா ஜோடியாக 'தமாக்கா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அடுத்து மகேஷ்பாபு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நிதின், ராம் பொத்தினேனி ஆகியோர் படங்களிலும் நடிக்கிறார்.
21 வயதே ஆன ஸ்ரீலீலாவுக்கு அதற்கள் ரசிகர்கள் அதிகமாகிவிட்டார்கள். தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்திருந்தாலும் புதிய படங்களில் நடிக்க அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்பதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரமாகவே ஸ்ரீலீலாவைத் தமிழிலும் எதிர்பார்க்கலாம்.