துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஷால் நடித்துள்ள லத்தி படம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. நடிகர்கள் ரமணா, நந்தா தயாரித்துள்ள இந்த படத்தை வினோத்குமார் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சுனைனா படத்தின் நாயகி. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது: இந்த படத்தின் கதையை சொல்லி இயக்குனர் வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன். இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்.
நான் எப்போதுமே புதுமுக இயக்குனர்களுக்குத்தான் முக்கியத்தும் கொடுப்பேன். அவர்கள்தான் தாங்கள் வெற்றி பெறும் வெறியோடு இருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனரை நாங்கள் இப்போது பாராட்டிக் கொண்டிருக்கிறோம். படம் வெளிவந்த பிறகு மக்கள் பாராட்டுவார்கள். சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகளில் வாங்காத அடியை இந்த ஒரே படத்தில் வாங்கி இருக்கிறேன். படத்தின் கடைசி 40 நிமிட காட்சிகள் பேசப்படுவதாக இருக்கும். படத்தின் சண்டை காட்சியில் நடிக்கும்போது பலமுறை அடிபட்டு உடம்பு மழுக்க காயங்களும், தழும்புகளும் இருக்கிறது. அதனால்தான் முழுக்கை சட்டை அணிந்திருக்கிறேன். கேரளாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.
ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு மார்க்கெட் உண்டு. அதன் அடிப்டையில்தான் படத்தின் பட்ஜெட் இருக்கும். ஆனால் இந்த படத்தன் பட்ஜெட் நான் இதுவரை நடித்த படங்களை விட அதிகம், என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளனர். பொதுவாக எனக்கு ஒரு குணம் உண்டு. ரமணாவும், நந்தாவும் எனக்கு கதை சிபாரிசு செய்ததால். அந்த கதையை கேட்பேன் கதை நன்றாக இல்லாவிட்டால் இருவரையும் என் அறைக்கு அழைத்து நன்றாக அடிப்பேன். நன்றாக இருந்தால் கட்டிப்பிடித்து பாராட்டுவேன். இந்த படத்தின் கதைக்காக இருவரையும் அழைத்த்து கட்டிப்பிடித்து பாராட்டினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஷால் பேசும்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து 'புரட்சி தளபதி வாழ்க' என்று சொல்ல, “வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான்” என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் டிஜிபி ஜாங்கிட், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளவில்லை.