கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சமி மேனன் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டில் வெளிவந்துவெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. அப்படத்திற்காக பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், விவேக் ஹர்ஷன் சிறந்த எடிட்டிருக்கான தேசிய விருதையும் பெற்றார்கள்.
அப்படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய “இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்” ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் 'ஜிகர்தண்டா' அளவிற்கான பேரும், பாராட்டுக்களும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் 'ஜிகர்தண்டா'வைக் கையிலெடுத்து இரண்டாம் பாகமாக எடுக்காமல் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என வித்தியாசமான பெயருடன் படத்தை ஆரம்பித்துள்ளார்.
அதற்கான அறிவிப்பு நேற்று 3 நிமிட டீசருடன் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்கிறார்கள். இரும்புப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸைப் பிடிப்பதற்காக போலீஸ் படையுடன் எஸ்ஜே சூர்யா அவருக்கெதிராக களமிறங்கும் காட்சி மட்டுமே அந்த 3 நிமிட டீசரில் இடம் பிடித்துள்ளது. 'ரெட்ரோ' டைப் படமாக இப்படம் உருவாகலாம் என டீசரைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. டீசரின் முடிவில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் மண்ணுக்குள்ளிருந்து 'கேமரா'வை எடுத்து சுடுவதுடன் டீசர் முடிவுக்கு வருகிறது.
'ஜிகர்தண்டா' போல சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கதாநாயகன் தான் இந்தப் படத்திலும் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த டீசர் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.