ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெலா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் லெஜெண்ட் சரவணன் கதநாயகனாக நடித்த லெஜெண்ட் படம் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார். 2013ல் பாலிவுட்டில் அறிமுகமான இவர் இப்போது வரை கிட்டத்தட்ட 15 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் 5 படங்களில் சிறப்பு பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது கூட தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் வால்டர் வீரைய்யா என்கிற படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
மிகப்பெரிய முன்னணி நடிகை இல்லை என்றாலும் கூட, தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 60 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் என்பது மிக ஆச்சரியமான விஷயம். பாலிவுட்டில் தீபிகா படுகோனேவுக்கு அடுத்ததாக இவரைத்தான் அதிக ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். பாலிவுட் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோருக்கு கூட இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் 6 சதவீதம் பேர்கள் கூட இல்லை என்பதும் ஆச்சரியமான விஷயம்.