சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் நாளை டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான 'சங்கீத்' நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை ஹன்சிகா செய்திருந்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மணமகன் சோஹைல் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்று இரவு திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருக்கும் திருமண ஜோடி பின்னர் மும்பை வர உள்ளார்களாம். அங்கு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.