காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் | இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர் | அப்பா பற்றி ரஜினி சொன்னதை வெளியில் சொல்ல மாட்டேன் : கமல் மகள் ஸ்ருதி | பேய் கதையில் இரண்டு நாயகிகள் | அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் |
'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2 கே கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் ஐந்தாறு கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் தற்போது 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் அங்கும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தற்போது பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்க, ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.