ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சில வாரங்களுக்கு முன்பு தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார். அவருக்கு பல சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சமந்தா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. ஆனால், பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. யாரோ வேண்டுமென்றே அப்படி ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டுள்ளார்கள்.
தனது தசை அழற்சி நோய்க்காக அமெரிக்க மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை மேற்கொண்டாராம். அதை இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்தார் என்கிறார்கள். இருப்பினும் அது பூரண குணமளிக்காத காரணத்தால் கேரள ஆயுர்வேத சிகிச்சையை சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி அவர் அந்த சிகிச்சையை மேற்கொண்டாராம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சமந்தா விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழல் வரும் என்றும் கூறுகிறார்கள்.
சமந்தா தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக 'குஷி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். சமந்தா படப்பிடிப்புகளுக்கு மீண்டும் எப்போது செல்வார் என்பது குறித்து அவரது ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.