விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் மும்பை நடிகையான பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் சல்மான்கான் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே. தனது காலில் கட்டு போட்ட நிலையில் தான் வீட்டில் அமர்ந்தபடி சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விபத்துக்கு பிறகு தான் நன்றாக தேறி வருவதாக தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே விரைவில் திரிவிக்கிரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா சமீபத்தில் இறந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு 28வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து பூஜா ஹெக்டேவும் நடிக்க இருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் மகரிஷி என்ற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.