தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
2014ம் ஆண்டு வெளியான அப்புச்சி கிராமம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வி.ஐ.ஆனந்த். அதன்பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு சந்தீப் கிஷன் நடித்த டைகர், நிகில் சித்தார்த்தா நடித்த எக்கடிக்கு போதாவு சின்னவாடா, அல்லு சிரிஷ் நடித்த ஒக்க ஷணம், ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படங்களை இயக்கினார்.
தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் 'ஊரு பேரு பைரவகோனா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக பெரிய பட்ஜெட்டில் இது உருவாகிறது. தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஆனந்த்.