வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! |

இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய 'தியா' படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. கடந்த 2011ல் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நடித்துள்ளார். இந்த நிலையில் வரும் நவம்பர் 20ம் தேதி இவரது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரைத்தான் நாக சவுர்யா திருமணம் செய்கிறார். மணப்பெண் அனிஷா பெங்களூரில் இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது திருமணம் பெங்களூரில் தான் நடைபெற உள்ளது. நவம்பர் 19ம் தேதி முதல் திருமண நிகழ்வுகள் துவங்க இருக்கின்றன. இது காதல் திருமணமா இல்லை நிச்சயக்கப்பட்ட திருமணமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.




