இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசு யுவன் ஷங்கர் ராஜா. அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் மெக்காவிற்கு புனித பயணம் சென்றுள்ளார் யுவன். இஸ்லாமியர்கள் அணிந்து செல்லும் ஆடையை அணிந்தபடி இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.