இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சமீபத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் வெளியான 'மகா' திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது . தற்போது சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கிய விஜய்சுந்தர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படத்துக்கு 'கார்டியன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை சபரி - குருசரவணன் இயக்கியுள்ளனர். இதில் மூன்று கெட்டப்புகளில் ஹன்சிகா நடித்துள்ளார். திரில்லராக இந்த படம் உருவாகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதை ஹன்சிகா மறுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு தனது காதலர் சோஹேல் கதுரியாவுடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்த செய்தியை ஹன்சிகா விரைவில் தெரிவிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது .
இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது.