மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா தனக்கு 'தசை அழற்சி' நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே ஓய்வில் இருந்த சமந்தா தனக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து வெளிப்படையாக நேற்று அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் சமந்தா விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளையும், ஆதரவையும் பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் சமந்தாவின் முன்னாள் மைத்துனரும் ஒருவர். நடிகர் நாகார்ஜுனா , அமலா தம்பதியினரின் மகனும், நாகசைதன்யாவின் தம்பியுமான அகில் “டியர் சாம், உங்களுக்கு எனது அனைத்து அன்பும் வலிமையும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அகிலின் இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
நாக சைதன்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. இருவரது பிரிவுக்குப் பின் இரு குடும்பத்தாரும் சமூக வலைத்தளங்களில் கூட எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார்கள். இந்நிலையில் தனது முன்னாள் அண்ணி சமந்தா குணமடைய அகில் வாழ்த்து சொல்லியிருப்பது தெலுங்குத் திரையுலகத்தினரையும் வியக்க வைத்துள்ளது.