‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை |
தீபாவளிக்குப் பிறகு எப்போதுமே படங்களின் வெளியீட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறையில்தான் படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டுவிட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு 'சர்தார், பிரின்ஸ்' படங்கள் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. அதற்கு முன் வெளியாகிய 'பொன்னியின் செல்வன், காந்தாரா' படங்கள் குறிப்பிட்ட அளவில் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி வெளியீடுகள் வெளிவந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற, ஒரே ஒரே படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
அதே சமயம் அடுத்த வாரம் நவம்பர் 4ம் தேதி “லவ் டுடே, காபி வித் காதல், நித்தம் ஒரு வானம்' ஆகிய மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'லவ் டுடே, காபி வித் காதல்' படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் தீபாவளி படங்கள், தீபாவளிக்கு முன்பு வெளிவந்த படங்கள் நவம்பர் 3 வரை தாக்குப் பிடிக்க முடியும். எனவே, நவம்பர் 4 அன்று வெளியாகும் படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கலாம். மேலும், சில படங்கள் அன்றைய போட்டியில் சேரவும் வாய்ப்புண்டு.