ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளார்கள். தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் ரூ 199 செலுத்தி படத்தைப் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு கட்டணம் செலுத்தாமல் படத்தை ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை படத்தின் பைரசி தரமில்லாத வீடியோவாக வந்து கொண்டிருந்தது. ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்கும் வசதி வந்ததும் 'எச்டி' தரத்துடன் பைரசி வெளியாகிவிட்டது. அதிலிருந்து தங்களுக்குப் பிடித்தமான பல வீடியோக்களை துண்டு துண்டாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றை படத் தயாரிப்பு நிறுவனங்களோ, அல்லது அமேசான் பிரைம் நிறுவனமோ தடுத்து நிறுத்தாமல் இருப்பது படத்தை தியேட்டர்களில் ஓட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி வெளியீடுகளால் குறைக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' தியேட்டர்கள் இன்று முதல் மேலும் அதிகரித்துள்ள நிலையில் இப்படி பைரசி வீடியோக்கள் வருவது தியேட்டர் வசூலை பாதிக்கும் என்பது உண்மை.