ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படம் ஹெனா. பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்பட பலர் நடிக்கிறார்கள். எழுத்தாளர் நிர்மல்குமார் இதன் கதையை எழுதியுள்ளார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் பிரஷாந்த் சந்தர் கூறியதாவது: ஹைனா என்றால் வேட்டையாடும் மிருகமான கழுதைப்புலி என்பதால், பெயருக்கேற்றார் போல் போல் திடீர் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். இதனை வேட்டை த்ரில்லர் வகை படம் என்று சொல்லலாம். படத்தின் மூலக்கதை மாயையை மையப்படுத்தி இருக்கும். என்றார்.