ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! |
நடிகர் யோகிபாபுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துடன் குழந்தை பிறந்ததற்கு சேர்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த 2020ல் இவருக்கு பார்கவி என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதிகாலை 3:14 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தீபாவளி வாழ்த்துடன் பெண் குழந்தை பிறந்ததற்கும் சேர்த்து யோகிபாபுவிற்கு ரசிகர்கள் இரட்டை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.