துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல வருடங்களாகவே உலக அளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி 'எப்எம்எஸ்' என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். 'எப்எம்எஸ்' என்பதற்கு 'பாரின் மலேசியா சிங்கப்பூர்' என்று அர்த்தம். ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள்தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் தரும் நாடுகளாக இருந்தது. அதற்குப் பிறகு இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இப்போதும் பேச்சு வழக்கில் சினிமாத் துறையினர் 'எப்எம்எஸ்' என்று அழைத்தாலும் அது 'ஓவர்சீஸ்' என்று வளர்ந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.