ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தில் சூர்யா காது கேட்காத வாய் பேச முடியாத மீனவர் வேடத்தில் நடிக்கிறார்.
ஆனால் முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. அதன் காரணமாகவே வணங்கான் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக ஏற்கனவே ஒரு முறை செய்தி வெளியானது. அப்போது அதை மறுக்கும் வகையில் பாலாவுடன் தான் இடம்பெற்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் சூர்யா. என்றாலும் அதன் பிறகு அவர் இப்போது வரை வணங்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வணங்கான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக மீண்டும் செய்திகள் வெளியாகத்தொடங்கி விட்டன.
இந்த நேரத்தில் வணங்கான் படத்தில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான ஷீகான் ஹுசைனி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வணங்கான் படம் கிடப்பில் போடப்படவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. நானும் அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதால் அதற்காக என்னை தயார் படுத்தி வருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.