இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் மோகன் ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்து இன்று(அக்.,5) வெளியிட்டுள்ளனர். சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'காட் பாதர்' படம் துவங்குவதற்கு முன்பே, நாகார்ஜுனாவிடம் அவர் கதை சொன்னதாகவும் அது பிடித்துப் போனதால், அவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.