லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை பிரபலங்களான அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் சோஷியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்து பேசு பொருளாகியுள்ளது. முதல் கணவரை பிரிந்த திவ்யா, சின்னத்திரை நடிகர் அர்ணவை காதலித்து வந்த நிலையில் அவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த தகவலும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
5 வயது குழந்தையுடன் திவ்யாவை ஏற்றுக்கொண்ட அர்னவின் பரந்த மனப்பான்மையையும், திவ்யா மீதான அவரது காதலையும் பாராட்டி பலரும் அப்போது அவரை புகழ்ந்தனர். ஆனால், இப்போது திவ்யாவும், அர்னவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். செல்லம்மா தொடரின் ஹீரோயின் அன்ஷிதாவுடன் அர்ணவுக்கு உறவு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திவ்யா, இது தொடர்பான விவாதத்தில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா தன்னை மிரட்டுவதாகவும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள அர்ணவ், '2017 ஆம் ஆண்டு திவ்யா எனக்கு லவ் புரொபோஸ் செய்தார். அப்போது நான் ஷாக் ஆனேன். காரணம் அப்போது அவர் கணவருடன் இருந்தார். 6 மாதம் கழித்து விவகாரத்து பெற்றதாக கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் தான் அவருக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அவர் தன் சொந்த குழந்தையையே தனது அக்கா குழந்தை என என்னிடம் சொல்லியிருந்தாள். இந்த உண்மை பிப்ரவரியில் தான் எனக்கு தெரிய வந்தது. இதை எல்லாம் கூட நான் பொறுத்துக்கொண்டேன்.
ஆனால், ரம்ஜான், பக்ரீத் என பண்டிகை நாட்களில் என் குடும்பத்தாரை பார்க்க ஊருக்கு கிளம்பினாள் தற்கொலை செய்து கொள்வேன் என என்னை மிரட்டுவார். இந்த ஹைபர் ஆக்டிவிற்காக மனநல சிகிச்சையும் எடுத்து வருகிறார். நான் கோயிலில் திருமணம் செய்தது எங்கள் வீட்டிற்கு தெரியாது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போடுவேன் என்று மிரட்டினார். என்னையும், என் குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என அவர் தான் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்' என்று திவ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் அர்ணவ்.
இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை? என்பது விரைவில் விசாரணையில் தெரியவரும்.