சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு செலக்டிவ் ஆன படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தி கிரேட் பாதர் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர், தற்போது மீண்டும் மலையாளத்தில், மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அமலாபால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி மற்ற இரு கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா கூறும்போது, “இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. என்ன விதமான கதாபாத்திரம் என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இரண்டுவித காலகட்டத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று நான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் மூலமாக என்னை தேடி வந்தபோது மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.