2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக, 2.O படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர் தனுஷ், உதயநிதி ஆகியோருடன் வெகுசில படங்களில் நடித்த எமிஜாக்சன், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்வதற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகி லண்டனில் செட்டில் ஆனார்..
இந்த நிலையில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய்யின் படத்திலேயே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் எமி ஜாக்சன். அச்சம் என்பது இல்லையே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . ஸ்டைலிஷ் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.