'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் வளர்ந்து வரும் சிறிய நடிகரை மணக்கிறாரே என்ற ஆச்சர்ய அலைகள் அப்போது பரவியது. ஆனாலும் தனுஷ் தனது சுய உழைப்பால், முயற்சியால் தேசிய விருது வரைக்கும் உயர்ந்தார். இன்று வணிக மதிப்புள்ள ஒரு நடிகராக வலம் வருகிறார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இது ரஜினிக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி “எவ்வளவு வசதி, பணம் குவிந்தாலும் மனதில் நிம்மதி இல்லை” என்று வெளிப்படையாகவே பேசினார்.தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பிய ரஜினி, சில காலம் இருவரிடமும் பேசுவதை தவிர்த்து வந்தார். பின்னர் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யோசியுங்கள் என்று கூறி வந்தார்.
காரணம் திருமண உறவு மீது ரஜினிக்கு பெரிய மரியாதையும், மதிப்பும் இருந்தது. அதனால்தான் அவர் லதாவுடன் சின்ன உரசல்கூட இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனை மகள், மருமகனுக்கு எடுத்துச் சொல்லி இருவரும் சேர்ந்து வாழ பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தற்போது வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கிறது.
அண்மையில் மகனின் பள்ளி விழாவில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டபோதே இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. ரஜினியின் தீவிர முயற்சியால் பிரிந்து வாழும் முடிவை இருவரும் கைவிட்டடிருப்பதாகவும், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே கூட்டாக ஒரு அறிக்கையை ஓரிரு தினங்களில் வெளியிட இருக்கிறார்கள். ஒரு தந்தையாக ரஜினி தன் கடமையை செய்திப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.