'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
‛டான்' படத்திற்கு பின் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மரியா நாயகியாக நடிக்க, சத்யராஜ் , யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அது குறித்து படக்குழு ஒரு போஸ்டரும் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.